கோடிக் கணக்கில் மது வரி மோசடி: அம்பலப்படுத்திய நிதி இராஜாங்க அமைச்சர்
672 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரியை ஐந்து மதுபான நிறுவனங்கள் செலுத்தத் தவறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாாடளுமன்றில் இடம்பெறும் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 3 சதவீத வரி விதிக்கப்படுவதால், தற்போது 400 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மது வரி மோசடி
அத்தோடு, நிறுவனங்களை மூடுவதன் மூலம் வரிகளை வசூலிக்க முடியாமல் போகும் எனக் கூறிய நிதி இராஜாங்க அமைச்சர், குறித்த நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு டிசம்பர் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
உரிம காலத்தை நீட்டித்து சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டோமென கூறிய அவர், மது வரி மோசடியை தடுப்பதற்கு இம் முறையே அதிக காலம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுபான போத்தல்களுக்கு ஸ்டிக்கர்கள் முறைப்படி நடைமுறைபடுத்தப்பட்டால், அரச வருவாயை பெருமளவில் அதிகரிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.