40,000 மெற்றிக் தொன் தரமற்ற டீசல் விற்பனையில்... குற்றம்சாட்டும் சஜித்
40,000 மெற்றிக் தொன் தரமற்ற டீசல் கையிருப்பு சந்தைக்கு விற்பனைக்காக விடப்பட்டு கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்
இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
டீசல் கையிருப்பு பரிசோதனை
அதேவேளை, டீசல் கையிருப்பின் மாதிரிகளின் இரண்டு ஆய்வக சோதனைகளின் போதும் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் முலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை நிராகரித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, குறித்த டீசல் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவை சந்தைக்கு வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த டீசல் கையிருப்பு பரிசோதனைகளில் தோல்வியடைந்தால் அது நிராகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.