கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள்
நாட்டிற்குள் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் ஏலக்காயை கொண்டு வர முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (06) கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடி பெறுமதி
கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பு (Colombo) மற்றும் ஹட்டன் (Hatton) பகுதிகளில் வசிக்கும் நிலையில், வெளிநாட்டு பயணம் சென்று மீண்டும் திரும்பி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இன்று (06) அதிகாலை இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அவர்களின் பயணப்பபைகளில் இருந்து வெளிநாட்டு விமான நிலையத்தின் வரி இல்லாத வணிக வளாகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்த 378 மதுபான போத்தல்களும் மற்றும் 132 கிலோகிராம் ஏலக்காயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குறித்த மதுபான போத்தல்களின் பெறுமதி ஒரு கோடியோ 50 லட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
