ஒமிக்ரோன் தொற்று பரவிய நாடுகள் விபரம் வெளியானது
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஒவ்வொன்றாக உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்டா எனும் தொற்று உலக அளவில் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது தான் மெல்ல மீண்டுவரும் நிலையில் ஒமிக்ரோன் எனும் தொற்று புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
தென்னாபிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் இது வேகமாக பரவக்கூடியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை 29 நாடுகளில் 373 பேருக்கு ஒமிக்ரோன்வகை கொரோனா பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை தொற்று கண்டறியப்பட்ட நாடுகளின் விபரம் வெளியாகியுள்ளது.
1. தென்னாபிரிக்கா - 183
2. பிரிட்டன் - 32
3. போட்ஸ்வானா - 19
4. நெதர்லாந்து - 16
5. ஜேர்மனி - 10
6. அவுஸ்திரேலியா - 8
7. ஹொங்கொங் - 7
8. இத்தாலி - 4
9. கனடா - 7
10. போர்த்துக்கல் - 13
11. கானா - 33
12. டென்மார்க் - 6
13. தென் கொரியா - 3
14. நைஜீரியா - 3
15. சுவிட்சர்லாந்து - 3
16. ஒஸ்திரியா - 4
17. இந்தியா - 2
18. இஸ்ரேல் - 2
19. பெல்ஜியம் - 2
20. செக் குடியரசு - 1
21. ரீயூனியன் தீவு (பிரான்ஸ்) - 1
22. சுவீடன் - 4
23. ஜப்பான் - 2
24. செக் குடியரசு - 1
25. நோர்வே - 2
26. அமெரிக்கா - 1
27. சவுதி அரேபியா - 1
28. அயர்லாந்து - 2
29. ஐக்கிய அரபு அமீரகம் - 14
30. ஸ்பெயின் - 2