மறு அறிவிப்பு வரை...! - லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Litro Gas
Litro Gas Price
By Kanna
சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன. எனினும் சீரற்ற வானிலை காரணமாக முழுமையாக தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளன.
அத்துடன், 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்