நள்ளிரவுமுதல் பாரிய அளவில் எகிறிய காஸ் சிலிண்டரின் விலை
price
increase
midnight
litro gas
By Sumithiran
நள்ளிரவு முதல் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா .1,257 ஆல் அதிகரிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, புதிய விலை ரூ .2,750 ஆக இருக்கும். 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ .503 ஆல் அதிகரித்து ரூ .1,101 ஆக உயர்ந்துள்ளது.
2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, புதிய விலை 520 ரூபாய் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 2,840 ரூபாவாகும்.
5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,136 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.