மீண்டும் விலை குறைக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயு! இன்று வெளியான புதிய அறிவிப்பு
விலை திருத்தம்
நாட்டில் நாளை மறுதினம் முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், தற்போது லிட்ரோ எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், எரிவாயு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
எரிவாயு வழங்குவதில் பிரச்சினை
சில விநியோகஸ்தர்கள் உரிய நேரத்தில் முன்பதிவுகளை மேற்கொள்ள தவறியதால், தற்போது சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் முழுமையாக தீர்க்கப்படும்.
அதேவேளை, லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
