முடிவுக்கு வரும் எரிவாயு வரிசைகள்: கொள்வனவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் தொன் எரிவாயு
ஒரு இலட்சம் தொன் எரிவாயு
ஒரு இலட்சம் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
முத்தரப்பு ஒப்பந்தமாக விநியோகஸ்தர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருமாக குறித்த ஒப்பந்தம் இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 90 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஒரு இலட்சம் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
90 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி
லிட்ரோ நிறுவனத்தினால் 20 மில்லியன அமெரிக்க டொலர் நிதியும் உலக வங்கியினால் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை எரிவாயுவானது நான்கு மாதங்களுக்கு போதுமானதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் 33,000 தொன் எல்பிஜி எரிவாயு
70% எரிவாயு உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் 5 மில்லியன் 12.5 கிலோ சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 கிலோ சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 கிலோ சிலிண்டர்கள் பெறப்படவதோடு, மீதமுள்ள 30% எரிவாயு வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இதன்போது லிட்ரோ நிறுவனத்தால் 20 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 33,000 தொன் எல்பிஜி எரிவாயு ஜூலை முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தப்பிடத்தக்கது.
