நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப்ஸ் சமையல் எரிவாயுக்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அதனை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயு நிறுவனங்கள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளன.
எனினும், எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்தையில் நிலவும் அதிக கேள்வி
7 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் (27) சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயுவிற்கு சந்தையில் நிலவும் அதிக கேள்வி மற்றும் நுகர்வோர் தேவைகளை கவனத்திற்கொண்டு எரிவாயு தொகை அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் 22ம் திகதி நாட்டை அண்மித்த எரிவாயு அடங்கிய கப்பல் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் 24ம் திகதி வருகை தந்த புழழனறடைட கப்பலில் 3900 மெட்ரிக் தொன் எரிவாயு தொகை நாட்டை வந்தடைந்தது.
இதற்கமைய எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |