காணாமற் போயுள்ள 13 வயதுடைய இளம் பிக்கு
Sri Lanka Police
Missing Persons
Sri Lankan Peoples
By Sumithiran
புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனாராம விகாரையில் fற்கை நெறியை மேற்கொண்டு வந்த 13 வயதுடைய அமரகெதர தேவசிறி என்ற இளம் பிக்குவை கடந்த (21ஆம் திகதி) முதல் காணவில்லை என புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவின்ன ரட்டியால பிரிவேனில் கல்வி கற்கும் இந்த பிக்கு கடந்த (21) ஆம் திகதி இரவு முதல் விகாரைக்கு வரவில்லை என புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனராமதாதிபதி கொஸ்கல சிறிதம்ம தேரர் புலத்சிங்கள காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தகவல் தெரிந்தவர்கள்
புளத்சிங்கள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு 0342282292, 0775155744, 078594395 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு இவர் தொடர்பில் தெரிந்தால் அறிவிக்குமாறு புலத்சிங்கள காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி