12 வயது மகள் வன்புணர்வு : சிறிலங்கா இராணுவ ஊழியர் கைது
தனது 12 வயது மகளை கடந்த இரண்டு வருடங்களாக வன்புணர்விற்கு உள்ளாக்கிய சிறி லங்கா இராணுவத்தில் ஊழியராக பணி புரியும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே நேற்று(01)கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபர் வவுனியா பம்பைமடு 17 வது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.
02 வருடங்களாக பாலியல் வன்கொடுமை
சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.
விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது
இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே காவல்துறைக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்புணர்விற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |