100 வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் சாதனை படைத்த வோர்னர்..!
தனது 100 வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் விளையாடும் டேவிட் வோர்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர் இரட்டை சதம் கடந்துள்ளார்.
அவுஸ்திரேலிய நட்சத்திர மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வோர்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்றுவரும் துடுப்பாட்ட போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் அவர் 254 பந்துகளை எதிர்கொண்டு 200 ஓட்டங்களை பெற்று தனது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார்.
200 ஓட்டங்கள்
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது ஆஸ்திரேலிய வீரராக வோர்னர் வரலாற்றில் பதிவானர்.
குறித்த போட்டியில் உபாதை மற்றும் தசைப்பிடிப்புகளால் அவதிப்பட்டாலும் இந்த போட்டியில் அவர் 200 ஓட்டங்களை கடந்தது துடுப்பாட்ட ரசிகர்களை மகிழ்வுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சாதனையை வோர்னர் தனது குடும்பத்தாரோடு பகிரும் வகையிலானா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
A ?? for David Warner in his ?th Test match. He had been struggling for a while before this moment and eventually retires hurt after this. An emotional moment at MCG! ?
— The Field (@thefield_in) December 27, 2022
? Cricket Australiapic.twitter.com/vVS1bRrhTY
குறித்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடும் அவுஸ்திரேலிய அணி தற்போது 3 விக்கட் இழப்புக்கு 386 ஓட்டங்களை பெற்றுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
