உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைப்பு தொடர்பில் விளக்கமளித்த மகிந்த!
Sri Lanka
Supreme Court of Sri Lanka
Mahinda Deshapriya
Election
By Kalaimathy
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார்.
தேர்தல் ஒத்திவைப்பு
அதற்கமைய, நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவினை ஏற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் முடிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் வெறும் காகித துண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
