விழுந்தாலும் மீண்டெழும் மந்திரமும் தந்திரமும் கற்றறிந்தவர்கள் நாம் - வரலாற்றுப் பதிவிற்குத் தயார்!

Maithripala Sirisena Sri Lanka Sri Lanka Freedom Party Central Province Election
By Kalaimathy Jan 25, 2023 07:42 AM GMT
Report

விழுந்தாலும் மீண்டெழக்கூடிய அரசியல் தந்திரம், மந்திரத்தை சிறிலங்கா சுதந்திரக்கட்சி நன்கு கற்றே வைத்துள்ளது. இந்த உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது கட்சி எழுச்சிபெற்று, வீறுநடை போடும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், சமூக சேவையாளருமான சதாநந்தன் திருமுருகன் தெரிவித்தார்.

மேலும் 1965 இல் நடைபெற்ற தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த சுதந்திரக்கட்சி 1970 இல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

வரலாற்று பதிவை ஏற்படுத்துவோம்

விழுந்தாலும் மீண்டெழும் மந்திரமும் தந்திரமும் கற்றறிந்தவர்கள் நாம் - வரலாற்றுப் பதிவிற்குத் தயார்! | Local Election Sri Lanka Freedom Party Economic

ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே திருமுருகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“எமது மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகின்றன. காடாக காட்சியளித்த இந்த மலையக மண்ணில் பசுமை புரட்சி செய்தனர். வீதி அமைப்பு உட்பட மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தனர்.

இதற்காக பலர் தமது உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தையே தோளில் சுமந்தனர். இன்றளவிலும் சுமந்து வருகின்றனர். நாட்டுக்காக முன்கள போராளிகள் போல் பாடுபட்டு வரும் மலையக மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

சமூகத்தை மாற்றும் புரட்சி

விழுந்தாலும் மீண்டெழும் மந்திரமும் தந்திரமும் கற்றறிந்தவர்கள் நாம் - வரலாற்றுப் பதிவிற்குத் தயார்! | Local Election Sri Lanka Freedom Party Economic

ஆனால் எமது பெருந்தோட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் என்பது இன்னும் மேம்படவில்லை. சிறார்கள் மத்தியில் போசாக்கின்மை பிரச்சினையும் நீடிக்கின்றது.

இனியும் இந்நிலைமை நீடிக்க இடமளிக்க முடியாது. எனவே தான் மாற்றமொன்றை ஏற்படுத்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக நான் அரசியல் களம் புகுந்துள்ளேன். பல சமூகசேவைகளை செய்து, கல்வி புரட்சிமூலம் சமூகமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றேன்.

அதனை அடுத்தகட்டம் நோக்கி கொண்டுசெல்லவே அரசியலுக்குள் வந்தேன். உள்ளாட்சிமன்ற தேர்தலில் எமது பிரதிநிதிகள் நுவரெலியா மாவட்டத்தில் கை சின்னத்தில் களமிறங்குகின்றனர்.

மைத்திரி காலத்திலேயே தனி வீட்டுத்திட்டம்

விழுந்தாலும் மீண்டெழும் மந்திரமும் தந்திரமும் கற்றறிந்தவர்கள் நாம் - வரலாற்றுப் பதிவிற்குத் தயார்! | Local Election Sri Lanka Freedom Party Economic

மலையக மக்களுக்கு நிச்சயம் நாம் கை கொடுப்போம். எமது கட்சி சின்னம்கூட கைதான். எமது கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன அதிபராக இருந்த நல்லாட்சி காலத்தில் தான் மலையகத்தில் தனிவீட்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டது. சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்படி மக்கள் துயர் அறிந்த அவர் நிச்சயம் மலையக மக்களை கைவிடமாட்டார். நாமும் அவருடன் இணைந்து மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020