எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை - தேர்தல் முடிவு குறித்து அதிபரின் கருத்து..!

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lankan local elections 2023
By Dharu Mar 13, 2023 10:46 AM GMT
Report

மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் சுயாதீனத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்திலும் ஆளும் கட்சி தலையீடு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

நிலைப்பாட்டில் மாற்றம்

எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை - தேர்தல் முடிவு குறித்து அதிபரின் கருத்து..! | Local Election Sri Lanka Precedent Speech Ranil

இந்த நிலையில், தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி திறை சேரிச் செயலருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளித்த திறை சேரியின் செயலர், நிதியை விடுவிக்குமாறு  நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்கேக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்ததுடன், அவரது அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து, நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அதிபரிடம் கேள்வி எழுப்பிய போது, "தேர்தல் தொடர்பில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை.

 நான் திரும்பவும் சொல்கின்றேன் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்.

நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும் சவாலுக்குப்படுத்த முடியாது" என்று ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026