ரணில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்த கூட்டமைப்பு!
M A Sumanthiran
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என அவர்கள் சொல்லவில்லை, 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என சொல்லுகின்றார்கள்.
நம்பிக்கையில்லை
உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதனால் நேற்றைய கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
