யாழ். மாவட்டத்தில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?
புதிய இணைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, நுவரெலியா - 30 % பதுளை - - 36 % மொனராகலை - 32 % அனுராதபுரம் - 30 % யாழ்ப்பாணம் - 18 % மன்னார் - 40 %
வவுனியா - 39.5 % திகாமடுல்ல - 31% கம்பஹா - 20 % மாத்தறை - 42 % களுத்துறை 20 % பொலனறுவை - 34 % கொழும்பு - 28 % புத்தளம் - 36 % காலி - 35 % இரத்தினபுரி - 30 % அம்பாந்தோட்டை - 19 % கிளிநொச்சி - 22 % மாத்தளை - 25 % கேகாலை - 33 % கண்டி - 21 % மட்டக்களப்பு - 23 % குருநாகல் - 30 % திருகோணமலை - 36%
நான்காம் இணைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
திகாமடுல்ல - 12% நுவரெலியா - 20% யாழ்ப்பாணம் - 6% வவுனியா - 31.5% மன்னார் - 12% அம்பாறை - 12.5% அநுராதபுரம் - 10% - 15% மொனராகலை - 15% பதுளை - 20% கேகாலை - 11%
இரண்டாம் இணைப்பு
ஆரம்பமாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை உத்தியோகபூர்வ வாக்களார் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தால் இன்று உபதபால் அலுவலகங்கள் திறந்திருக்கும் எனவும் அங்கு சென்று தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது.
இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.
வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வாக்களிக்க எடுத்து செல்ல வேண்டும்
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த முறை தேர்தலில், 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதன்படி தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை வாக்களிக்கும் போது எடுத்து செல்ல வேண்டும்.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றையும் பயன்படுத்த முடியும்.
வாக்குகள் நிராகரிக்கப்படும்
அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும்.
உங்களிடம் விருப்பமான வேட்பாளர் இருப்பினும் வாக்குகள் கட்சிகள் அல்லது குழுக்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு அல்ல. உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கு நேரடியாக வாக்களிக்க அனுமதிப்பதில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தவறாகக் குறிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்படும். வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும்.
வாக்கு எண்ணும் பணிகள்
வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும், அங்கு ஒவ்வொரு பகுதி அல்லது வார்டுக்கான முடிவுகள் வாக்குச் சாவடியிலேயே அறிவிக்கப்படும்.
அந்தந்த உள்ளூர் அதிகாரிகளுக்கான ஒட்டுமொத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
