உள்ளூராட்சி தேர்தலில் நடக்கப்போவது இதுதான்: ரணிலின் சகா வெளிப்படை!
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அளிக்கப்படாத வாக்குகளின் எண்ணிக்கை, அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கு வழங்கப்படாத ஒவ்வொரு வாக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரநெருக்கடி
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்து, ஆட்சியைக் கைப்பற்றி, பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து, நாட்டை முன்னோக்கி அழைத்துச் சென்றதாகவும் வஜிர அபேவர்தன அதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை பொதுமக்கள் அந்த விடயங்களை மறக்க மாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலி, உலுவிடிகேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புத்தாண்டுக்குப் பிறகு பணிகளைத் தொடங்கும் போது வஜிர அபேவர்தன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
