தனது சொந்த ஊரில் வாக்கினை பதிவு செய்த சிறீதரன் எம்.பி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (06) காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) சற்று முன்னர் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
சிறீதரனின் சொந்த இடமான கிளிநொச்சி (Kilinochchi) - வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் உள்ள 40 வட்டாரங்களையும் வென்று கிளிநொச்சி மக்களின் ஆணையுடன் அரசியலையும் அபிவிருத்தியையும் மேற்கொள்வோம் என சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (6) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையிலே, கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான கரைச்சி, பூநகரி, பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்காக 40 வட்டாரங்களில் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
