NPP பிரசாரங்களில் ஒலித்த விடுதலைப்புலிகளின் பாடல் : விளக்கமளித்த பொதுச் செயலாளர்
தமிழ் தேசிய வாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரசாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிட்டுள்ளமை குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) கருத்து வெளியிட்டுள்ளது.
தங்களது கட்சிக்கும் அந்தப் பாடல்களுக்கும் தொடர்பில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க (Nihal Abeysinghe) தெரிவித்துள்ளார்.
அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை அண்மையில் பிரசாரததிற்காக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
சிவாஜிலிங்கம் எதிர்ப்பு
இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.KShivajilingam) எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலே நிஹால் அபேசிங்க இவ்வாறு பதிலளித்துார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பொதுச் செயலாளர், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகள், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் (K. Ilankumaran) முகநூலில் டாக் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு அந்த காணொளிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
முகநூலில் பகிரப்பட்ட காணொளி
அத்தகைய காணொளிகள் டாக் செய்யப்படுவதில், தேசிய மக்கள் சக்திக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் சில இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூலில் காணொளிகளை உருவாக்கி டாக் செய்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அனுமதியின்றி முகநூலில் காணொளிகளை டாக் செய்ய முடியாது என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
