கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றப் போவது யார்.....!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் மற்றும் கைப்பற்றியுள்ள ஆசனங்கள் குறித்த முழுமையான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 476,182 வாக்குகளைப் பெற்று 297 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 195,380 வாக்குகளைப் பெற்று 109 ஆசனங்களை தனதாக்கியுள்ளதுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 79,779 வாக்குகளைப் பெற்று 44 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
பெற்றுள்ள ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 70,093 வாக்குகளைப் பெற்று 38 ஆசனங்களை வெற்றிபெற்றுள்ள நிலையில் சர்வஜன அதிகாரம் (SB) - 37,125 வாக்குகளைப் பெற்று 21 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுகின்றது.
குறிப்பாக, கொழும்பு மாநகர சபையின் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
கொழும்பு மாநகர சபை
அதாவது, 117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மைக்கு தேவையான 69 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களை வென்றுள்ளதோடு, ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.
அதேபோன்று 48 உறுப்பினர்களை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்திக்கும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
