ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், இதனை அதிகமானவர்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகளில் 53 வீதமானவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக வெரிடே (VERITE) எனப்படும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடந்த அக்டோபரில் ஆய்வு நடத்தப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் அரசியல் சக்திகள்
இலங்கை முழுவதும் உள்ள ஆயிரத்து 29 பேரிடம், தேசிய பிரதிநிதித்துவ மாதிரி பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது
இந்த ஆய்வில் பங்கேற்ற 8 வீதமானோர் மாத்திரம் உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 39 வீதமானவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |