முல்லைத்தீவில் 11 கிராம அலுவலர் பிரிவுகளுக்கே முடக்கம்! ஏனையவை விடுவிக்கப்பட்டன
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் 09 கிராம அலுவலர் பிரவுகளும், முள்ளியவளை பொலிஸ் பிரிவில் 02 கிராம அலுவலர் பிரிவுகளும் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் வருமாறு,
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு
01. தேவிபுரம்
02. புதுக்குடியிருப்பு மேற்கு
03. புதுக்குடியிருப்பு கிழக்கு
04. மந்துவில்
05. மல்லிகைத்தீவு
06. கோம்பாவில்
07. உடையார்கட்டு வடக்கு
08. உடையார்கட்டு தெற்கு
09. வள்ளிபுனம்
முள்ளிவளை பொலிஸ் பிரிவு
01. முள்ளியவளை மேற்கு
02. முள்ளியவளை வடக்கு
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.