மன்னாரில் வெடித்த பாரிய போராட்டம்! குவிக்கப்பட்ட காவல்துறையினர்

Sri Lankan Tamils Mannar
By Kanooshiya Sep 29, 2025 10:56 AM GMT
Report

புதிய இணைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்று காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பல்வேறு கிராமங்களில் உள்ள கடற்றொழிலாளர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமானது.

ஆரம்பமான பேரணி 

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறையினரினால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து குறித்த பேரணி ஆரம்பமானது.

மன்னாரில் வெடித்த பாரிய போராட்டம்! குவிக்கப்பட்ட காவல்துறையினர் | Lockdown Protest Mannar

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று வருகை தந்தது. மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் காவல் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.

அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

மன்னாரில் வெடித்த பாரிய போராட்டம்! குவிக்கப்பட்ட காவல்துறையினர் | Lockdown Protest Mannar

பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்று கூடிய இடத்திற்கு வருகை தந்தார். இதன் போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய கடிதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் பகுதிக்குச் சென்றனர்.

காவல்துறையினர் தாக்குதல் 

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தாக்குதலை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மன்னாரில் வெடித்த பாரிய போராட்டம்! குவிக்கப்பட்ட காவல்துறையினர் | Lockdown Protest Mannar

இதனால் காவல்துறையினருக்கும்,போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் காவல்துறையினர் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

தொடர்ச்சியாக முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கதைத்து அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர். அதனைத் தொடர்ந்து பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறித்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், பல ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று மன்னாரில் பொது முடக்கல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் குறித்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று முற்பகல் 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வாக்குமூலம் வழங்க வந்த அர்ச்சுனா ஊடகவியலாளர்களுடனும் வாய்த்தர்க்கம்

வாக்குமூலம் வழங்க வந்த அர்ச்சுனா ஊடகவியலாளர்களுடனும் வாய்த்தர்க்கம்

மனு கையளிப்பு

மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் உரிமைக்கான போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

மன்னாரில் வெடித்த பாரிய போராட்டம்! குவிக்கப்பட்ட காவல்துறையினர் | Lockdown Protest Mannar

இந்தப் போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில், மன்னார் மாவட்ட அரச அதிபருக்குக் கையளிக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

கரூர் துயரச் சம்பவம்: காவல்துறை மீது நேரடியாக குற்றம் சுமத்தும் த.வெ.க

கரூர் துயரச் சம்பவம்: காவல்துறை மீது நேரடியாக குற்றம் சுமத்தும் த.வெ.க


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026