எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாடு முடக்கப்படுமா?
sri lanka
lockdown
holidays
By Vanan
எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இயல்பு வாழ்க்கையை கொண்டு செல்ல பழகவேண்டும் என அவர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
எதிர்வரும் புதன்கிழமை ஹஜ் பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் கொழும்பில் அதிகளவு முஸ்லிம்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் பரவி வரும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி