இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்த தொடர்வார் - அரசாங்கம் அறிவிப்பு
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பதவியையே லொகான் ரத்வத்த இராஜினாமா செய்துள்ளதாகவும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்த தொடர்வார் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த அவர், சிறைச்சாலைக்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஸ, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சு பொறுப்பில் இருந்தும் லெகான் ரத்வத்த விலகியுள்ளதாகவும்,
லொகான் ரத்வத்த இராஜாங்க அமைச்சுப் பதவியில் தொடர்வது விசாரணைகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.
தற்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அது தொடர்பான தகவல்களை வெளியிட முடியும் என நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.