சற்று முன்னர் பாதளா உலக குழு உறுப்பினரின் சகோதரர் சுட்டுக்கொலை
Sri Lanka Police Investigation
Death
Gun Shooting
By Jaso
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் 'லொகு பாட்டி'யின் (Loku Patty) சகோதரர், அஹுங்கல்ல வெலிகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (01) இரவு 8.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9 மி.மீ ரகப் பிஸ்டல் துப்பாக்கியால் இக்கொலையைச் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்