கிளிநொச்சி காவல் நிலையத்தில் லண்டன் நபர் செய்த காரியம்: எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை
கிளிநொச்சியில் (Kilinochchi) லண்டனில் (London) இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் காவல் நிலையத்தில் இன்று (30.03.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், லண்டனில் இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி தர்மபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் காவல்நிலைய பொறுப்பாதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 50,000 ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
