அமெரிக்காவில் தொடரும் காட்டுத்தீ : அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை
அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) பகுதியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 16 ஆக உயரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவலடைந்து வருகின்றது.
இதுவரை, 35 ஆயிரம் ஏக்கர் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
அத்தோடு, சுமார் 12 ஆயிரம் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், காட்டுத் தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மக்கள் வெளியேற்றப்பட்ட வீடுகளில் இருந்து கொள்ளையடித்ததற்காக, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையை தடுப்பதற்காக, மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்