நிலக்கரி மோசடியை மக்கள் மீது சுமத்த எரிபொருள் விலை அதிகரிப்பு : நாமல் குற்றச்சாட்டு
எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறிய ஜனாதிபதி எந்த அடிப்படையில் எரிபொருள் விலையை உயர்த்தினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பினார்.
SLPP கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
45 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு
"சமீபத்தில், இந்த நாட்டின் ஜனாதிபதி 45 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்றும் கூறினார்.அமைச்சரும் அதையே கூறினார்.

ஆனால் இப்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆவதற்கு முன்பே, உலக சந்தை விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.
நியாயமான சந்தேகங்கள்
இப்போது எங்களுக்கு நியாயமான சந்தேகங்கள் உள்ளன. 45 நாட்களுக்கு எரிபொருள் இருப்பதாகக் கூறிய அரசாங்கம், நிலக்கரியில் செய்யப்பட்ட மோசடியை ஈடுசெய்யும் வகையில் இந்த நாட்டு மக்கள் மீது சுமையை சுமத்துவதற்காக எரிபொருள் விலையை அதிகரித்ததாக நமல் ராஜபக்ச தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |