லிட்ரோவை தொடர்ந்து நகர்வு: குறைக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று(01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் முன்னிலைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு
மேலும் ஐந்து கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 248 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று நள்ளிரவு முதல் முன்னிலையாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |