எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்
புதிய இணைப்பு
இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.
அதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 07 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை விலை 440 ரூபாய் ஆகும்.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.
அதேவேளை, மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.
எனினும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை(fuel price)குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பல நிவாரணங்கள்
அதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வரி குறைப்பு ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |