சம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் : இலாபத்தில் சரிவை சந்திப்பதாக அறிவிப்பு
முன்னணி மின்னணு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சம்சங் (Samsung) இன் காலாண்டுக்கான இலாபம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் அதன் லாபம் 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டின் (2022) இதே காலாண்டுக்குரிய இலாபத்துடன் ஒப்பிடுகையில் 35 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று
தவிரவும், எதிர் வரவிருக்கும் மாதங்களிலும் இலாபம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் எனவும் நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உருவானதால் பலருக்கும் மின்னணு உபகரணங்கள் மீதான தேவை அதிகரித்தது.
இதன் காரணமாக பலரும் புதிய மின்னணு உபகரணங்களை வாங்கியதால் அந்தவேளையில் சம்சங் இன் விற்பனை அதிகரித்து அதிக இலாபம் ஈட்டப்பட்டது.
அதுவே, நுகர்வோரின் தேவை 2021லிருந்து குறையத் தொடங்கியதால்,உபகரணங்களின் விலையும் குறைய தொடங்கி இலாபம் மெல்ல மெல்ல சரிவடைய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் மின்னணு கண்காட்சி
ஆண்டுதோறும் அமெரிக்கவின் லாஸ் வேகாஸ் நகரில் சிஈஎஸ் (CES) எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இதில் உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கும், சுமார் 4000 விற்பனையாளர்கள் வரை காட்சி கூடம் அமைப்பதால், அதை காண சுமார் பார்வையாளர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு (2024) ஜனவரி 9 அன்று ஆரம்பமாகி 12 ஆம் திகதி வரை இந்தக் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், சம்சங் நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |