குறைந்த செலவில் விசா வழங்கும் நாடு இது தான்!
10 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பின்லாந்து(Finland) குறைந்த செலவில் விசா வழங்குகிறது.
ஐரோப்பாவில் பல நாடுகள் டிஜிட்டல் நோமாட் (Digital Nomad) விசா வழங்கினாலும், அவற்றின் செலவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, போர்ச்சுகல், எஸ்டோனியா, கிரோஷியா போன்ற நாடுகளில் விசா பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.
எனினும், "ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு" என்று அழைக்கப்படும் பின்லாந்து, குறைந்த வருவாய் தேவையுடன் விசா வழங்குகிறது. அந்த வகையில் €1,220 மாத வருமானம் இருந்தால், சுயதொழில் (Self-employment) விசா மூலம் பின்லாந்தில் வேலை செய்யலாம்.
பாதுகாப்பான நாடு
இந்த விசா 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும் என்பதுடன் மேலும் ஒரு ஆண்டுக்கு புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் Freelancerகள், ஆலோசகர்கள், தொழில்முனைவோர்கள் பின்லாந்தில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும்.
இதேவேளை, பின்லாந்து உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் 14ஆவது இடத்தை பெற்றுள்ளதுடன் Helsinki, Oulu, Turku போன்ற நகரங்கள் டிஜிட்டல் நோமாட்களுக்கு சிறந்த இடங்களாகும்.
மேலும் குறைந்த செலவில் உயர் வாழ்க்கைத்தரம் வேண்டும் என்றால், பின்லாந்து சிறந்த தேர்வாக அமையலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்