இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வெளியான முக்கிய தகவல்
இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில்(Bay of Bengal) தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்(University of Jaffna) விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா(Nagamuthu Pradeeparaja) தெரிவித்துள்ளார்.
இந்த தாழமுக்கமானது எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பின்னர் உருவாக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முதலாவது தாழமுக்கமாக இது அமைவதுடன் இது இன்றைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலான கணிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்கங்கள்
இந்நிலையில் இதில் சில மாற்றங்களும் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ளுமாறு நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இக் காலத்தில் தோன்றுகின்ற தாழமுக்கங்கள் பங்களாதேஷ்(Bangladesh) அல்லது மியன்மாரை(Myanmar) நோக்கியே செல்வதுண்டு.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.
அதிகளவிலான வெப்பநிலை
அத்தோடு நாளை(08) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதுடன் இந்த மழை வெப்பச்சலன மழை என்பதனால் இடி மின்னலுடன் இணைந்ததாகவே இருக்கும்.
எனவே இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது நிலவும் அதிகமான வெப்பநிலை தற்காலிகமாக எதிர்வரும் வாரம் சற்று குறைவாக இருக்கும்.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு தற்போது நிலவும் அதிகளவிலான வெப்பநிலையே நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |