குறையவுள்ள வட்டிவீதங்கள் -மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
Central Bank of Sri Lanka
Shehan Semasinghe
By Sumithiran
எதிர்காலத்தில் வட்டிவீதங்கள் குறையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நிலவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதி அமைச்சும் மத்திய வங்கியும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதால் வட்டி வீதங்கள் குறையும் என சாதகமான முடிவுகளை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நம்பிக்கையை உடைக்கும் வகையில்
எனவே அபிவிருத்தியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை உடைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
