விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! சரத் பொன்சேகாவிற்கு தெரிந்த இரகசியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் முற்றாக அழித்துவிட்டோம். எனவே பாதாள உலகக் குழுவினர் புலிகளின் ஆயுதங்களை பயன்படுத்துவதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கும் எதிர்க்கட்சியினர் தொடர்பில் எனக்கு நன்கு தெரியும். எனினும் அது குறித்து என்னால் தெரிவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
எல்லா பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதங்களும் எம்மால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எனவே பாதாள உலகக் குழுவினர் புலிகளின் ஆயுதங்களை பயன்படுத்துவதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆனால் பாதாள உலகக்குழுவினருக்கு இன்று ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வது கடினமான விடயமல்ல.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
