பிரபாகரன் தப்பித்துச் சென்றாரா..! மரண அறிவிப்பில் மர்மம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெகு விரைவில் வெளிப்படுவார். வெளியில் வந்து தமிழீழ மக்களினுடைய தாகத்தை தீர்க்கும் வகையில் அவர் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து போராட்டத்தை அறிவிப்பார்.
அது ஆயுதப் போராட்டமாகத் தான் இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியிருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பழ. நெடுமாறன் கூறியதைப் போல் வெளிப்படவில்லை என்றால் பழ நெடுமாறன் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக்கூடும்.
ஆனாலும் கடந்த கால அவரது அரசியல் அனுபவங்களினூடாக அவரது வார்த்தைகளை தான் நம்புவதாக அரசியல் விமர்சகர் கலை கூறுகிறார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து பகிர்கையில், மேற்கண்டவாறு கூறினார்.
இரு வாரங்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனது இருப்பு தொடர்பிலான அறிக்கையினை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டிருந்ததுடன், செய்தியாளர் சந்திப்பினையும் நடத்தி இந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பிரபாகரனது மரண அறிவிப்பில் மர்மங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர் கலை சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
பிரபாகரன் உயிரோடு - மற்றுமொரு ஆதாரம் வெளியீடு
பிரபாகரனுக்கு இதுதான் நடந்தது..!
மே 15 வரை களத்திலே இருந்த பிரபாகரன்..! வெளிவரும் இறுதிக்கட்டம்
2009இல் காட்டிய உடல் யாருடையது..! தலைவர் பிரபாகரன் எந்த நாட்டில் இருக்கிறார்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
