விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது!
Sri Lanka Police
India
By pavan
இலங்கையை விட்டு வெளியேறிய போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரஜை ஒருவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை பயங்கரவாத பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனக்கூறப்படும் செல்லப்பாக்கியம் சுதாகரன் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் வசித்து வந்த சுதாகரன், 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் எப்படி இந்தியாவிற்கு சென்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
மரண அறிவித்தல்