யுத்த வெற்றி என்ற பெயரில் ராஜபக்சவினர் செய்த அட்டூழியங்கள்: நீதிமன்ற தீர்ப்பில் அம்பலம்

Sri Lanka Politician Sri Lankan political crisis
By Pavan Nov 19, 2023 07:38 AM GMT
Report

யுத்த வெற்றியை என்ற பெயரில் ராஜபக்சவினர் நாட்டில் செய்து வந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இந்த நாட்டின் சிரேஷ்ட நபர் ஒருவருக்காக நடத்தப்பட்ட நிகழ்வில், படித்த நபர் என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஒருவர், ராஜபக்சவினருக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதும் இல்லை, ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதும் இல்லை.

தேவை என்றால் எங்களுக்கு பொது மக்களை வீதிக்கு கொண்டுவர முடியும் என தெரிவித்திருந்தார்.

கிழக்கு ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் தொண்டமான்! சிங்கள பத்திரிகையின் பரபரப்பு தகவல்

கிழக்கு ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் தொண்டமான்! சிங்கள பத்திரிகையின் பரபரப்பு தகவல்

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நாடு தற்போது சரியான திசைக்கு பயணிக்க ஆரம்பித்திருக்கும்போது ராஜபக்சவினரை பாதுகாக்க இருக்கும் இந்த படித்தவர்கள் என்ற குழுவினர், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாட்டு மக்களை பலிக்கடாவாக்க முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அத்துடன் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பதை ஏற்றுக்கொள்வதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

யுத்த வெற்றி என்ற பெயரில் ராஜபக்சவினர் செய்த அட்டூழியங்கள்: நீதிமன்ற தீர்ப்பில் அம்பலம் | Ltte Final War Immigrants To Rajapaksa Family

இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாறு எங்களுக்கு தெரியும். தெரிவுக்குழு அமைத்து நாட்டில் நீதித்துறையின் உயர் பதவிக்கு கை வைத்த வரலாறு இந்த நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது.

அன்று பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டுவந்து அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை சமர்ப்பித்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்கிய வரலாற்றை எங்களுக்கு மறக்க முடியாது.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ‘ரெடி’

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ‘ரெடி’

ராஜபக்சவினர் யுத்த வெற்றி

அதனால் இந்த வாரலாற்றுக்குள் இருந்து தொடர்ந்தும் நாங்கள் செயற்படுவதென்றால் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணங்க முடியாது என்றால், அது தொடர்பில் கீழ் மட்டத்தில் இருந்து கதைத்துக்கொண்டிருக்காமல் அதனை நீதிமன்றத்துக்கு சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும்.

யுத்த வெற்றி என்ற பெயரில் ராஜபக்சவினர் செய்த அட்டூழியங்கள்: நீதிமன்ற தீர்ப்பில் அம்பலம் | Ltte Final War Immigrants To Rajapaksa Family

அத்துடன் யுத்தம் செய்து நாட்டை பாதுகாத்ததாக தெரிவித்தாலும் யுத்தத்துக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமாகியது, ஜேஆர். அதிபர் 77இல் ஆட்சிக்கு வந்து நாட்டில் புதிய தொழிற்சாலைகளை ஆரம்பித்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க எடுத்த வேலைத்திட்டங்கள் மூலமாகும்.

அதனால் ராஜபக்சவினர் யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்திக்கொண்டு செய்த விடயங்களால், தற்போது நாடு ஏற்றுக்கொண்டுள்ள நிலைப்பாடுதான் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் ராஜபக்சவினர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026