உலுகேதென்னவின் விசாரணையில் சாட்சியாக முன்னாள் விடுதலைப் புலிகள் புலனாய்வாளர்
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பங்கேற்ற அடையாள அணிவகுப்பானது, புலனாய்வாளர்களால் அழைத்துவரப்பட்ட முன்னாள் மூத்த விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், பதிலளிக்கவோ தவறியதால் எதிர்பாராத விதமாக இரத்து செய்யப்பட்டதாக இலங்கையின் ஊடகங்களை மோற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணையில் நீதவான் சிங்களத்தில் எழுப்பிய கேள்விகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது பதிலளிக்கவோ தவறியதால் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைப் புலனாய்வுத் தலைவரான "பாரதி" என அடையாளம் காணப்பட்ட சாட்சி, கொலை முயற்சி விசாரணை தொடர்பாக அட்மிரல் உலுகேதென்னவை அடையாளம் காண குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) அழைத்து வரப்பட்டுள்ளார்.
அடையாள அணிவகுப்பு
இருப்பினும், பொல்கஹவேலா நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, பாரதியால் சிங்களத்தில் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை என கூறப்படுகிறது.
மேலும், பாரதி சி.ஐ.டிக்கு அளித்த எழுத்துப்பூர்வ அறிக்கை சிங்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ ஆவணத்தில் மொழிபெயர்ப்பாளரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இதனால் அறிக்கை எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த சட்ட மற்றும் நெறிமுறை கவலைகள் எழுந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடையாள அணிவகுப்பு செல்லாததாக்கப்பட்ட போதிலும், கொலை முயற்சி குற்றச்சாட்டின் தீவிரம் காரணமாக பிணை வழங்க முடியாது என்று நீதவான் கூறியுள்ளார்.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த மிகவும் கொடூரமான படுகொலைச் சதித்திட்டங்களில் ஒன்றில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக பாரதியை இராணுவ வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன.
ஜூன் 2008 இல் கொழும்பை அடையும் நோக்கில் 1,080 கிலோகிராம் C-4 வெடிபொருட்களை மீன் க நிரப்பப்பட்ட ஒரு கனரக வாகனத்தை ஒழுங்குசெய்ய அவர் உதவியதாகக் கூறப்படுகிறது.
