விடுதலைப் புலிகளின் தலைவர் பயங்கரவாதி அல்ல! பெரும்பான்மையினத்தவர் ஒருவர் யாழில் போராட்டம் (காணொலி)

Protest Jaffna Economy SriLanka Sinhala SL Goverment
By Chanakyan Mar 31, 2022 06:20 AM GMT
Report

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

நான் எடுத்த 26 ஆயிரத்து 900 புகைப்படங்களை வழங்கியுள்ளேன். உண்மைகளை நான் வழங்கியுள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைவரை பயங்கரவாதியாக மாறியமைக்கு இலங்கை அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுப்பிரமணிய பூங்கா முன்றலில் இன்று காலை 7.30மணி தொடக்கம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் கருத்துத் தெரிவிக்கையில், 

விடுதலைப் புலிகளின் தலைவர் ஏன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார் - என்ன காரணத்திற்காக அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார் - அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருப்பார். ஆனால் இலங்கையில் இருந்த அரசியல் பின்னணி மற்றும் ஏதோ ஒரு சூழ்ச்சியின் காரணமாகவே அவர் பயங்கரவாதி என பெயர் குறிப்பிடப்படும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இனியும் வடக்கிலிருந்து ஒரு விடுதலைப் புலிகளின் தலைவரைப் போல் ஒருவர் உருவாகும் நிலைமையினை நாங்கள் ஏற்படுத்தக்கூடாது.

இனி பிறக்கும் குழந்தைக்கு நாங்கள் சயனைட் குப்பியை கொடுக்காது வடக்கு - தெற்கு மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு  விடுதலைப் புலிகளின் தலைவர் போன்றவர்களை நாங்கள் உருவாக்காது தடுக்க முடியும்.

தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுத்தேன். நான் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் பற்றி பேசியவன். அவர்களே என்னை தற்போது கடுமையாக விமர்சித்து, தாக்குதல் தொடுக்க முயற்சித்து வருகின்றனர்.

இது மோசமான அரசியல் முன்னுதாரணம். இப்படியானவற்றை செய்ய வேண்டாம். மிகவும் மோசமானது. கனவான் அரசியல்வாதிகள் வடக்கில் இருக்கின்றனர்.

இப்படி செய்ய வேண்டாம் அருவருப்பு, வெட்கம். வடக்கில் உள்ள தமிழர்களுக்கும் தெற்கில் உள்ள மக்களுக்கும் ஐக்கியம் என்பது முக்கியம். 30 ஆண்டுகள் போர் செய்தோம், அதன் மூலம் எமக்கு என்ன கிடைத்தது. ஏன் அடிப்பிடிபட வேண்டும்.

எமது இரத்தம் ஒன்று என்றால், ஏன் நாம் இனவாதத்தில் சிக்கி, இழந்தது எத்தனை, எத்தனை உயிர்கள் நாசமாகி போனது. எவ்வளவு சொத்துக்கள் அழிந்து போயின. அதிகமான இழப்பு தமிழர் சகோதரர்களுக்கே ஏற்பட்டது. சகோதர தமிழர்களுக்கே சொத்துக்கள் அழிந்து போயின. இனவாதம் மூலம் எமக்கு கிடைத்தது என்ன?.

வடக்கில் உள்ள மக்களுக்கு சுதந்திரமாக பிறக்கவும் வாழவும், நித்திரை கொள்ளவும், நித்திரையில் எழுந்திருக்கவும் இறக்கவும் உரிமை இருக்கின்றது. இவையே மனிதர்களுக்கு தேவையானவை. இந்த பிரச்சினைகளை ஏன் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாது.

பிறக்க போகும் பிள்ளைகளும் இதனையே வழங்க போகிறோமா?. அப்படி செய்ய வேண்டாம். அன்று இரண்டு வயது குழந்தை தற்போது 22 வயதான இளைஞன். அந்த இளைஞர்களை வருமாறு அழைக்க நான் ஆசைப்படுகிறேன். இந்த சமூகத்திற்கு நான் பல கடமைகளை நிறைவேற்றியுள்ளேன். அப்படியான என்னை வடக்கில் உள்ள மக்கள் விமர்சித்தனர்.

உண்மையை பேசியதால், என்னை விமர்சித்தனர். வெட்கம். காற்சட்டை அணிந்து இந்த இடத்திற்கு வந்த அரசியல்வாதியை காற்சட்டை கழற்றி விட்டு, புடவை கட்டிக்கொள்ளுமாறு நான் கூறுகிறேன். வெட்ககேடான வேலைகளை செய்ய வேண்டாம். நாளை பிறக்க போகும் பிள்ளைகளின் கைகளில் சயனைட் குப்பிகளை கொடுக்க வேண்டாம்.

ரி.56 துப்பாக்கியை கொடுக்க வேண்டாம். வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களுக்கும் இடையில் பகையையும் குரோதத்தையும் உருவாக்கி, நாட்டில் மீண்டும் இரத்த களறியை ஏற்படுத்தும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது. பிறக்க போகும் குழந்தைகளுக்கு இதனை வழங்க வேண்டாம். அந்த மக்களுக்கு சுதந்திரத்தை கொடுங்கள், பேச்சுரிமையை கொடுங்கள்.

தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறைக்கும், பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனைக்கும் செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுங்கள். நாங்கள் இறந்து போவோம். மக்கள் சுதந்திரமாக வாழும் தேவை இருக்கின்றது. அந்த பின்னணியையா இவர்கள் உருவாக்கினர். பிரபாகரன் என்பவர் எப்படி கொலைக்கார் ஆனார். எப்படி சர்வதேச பயங்கரவாதியாக மாறினார்.

அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் அழகான இளைஞன். அப்படியானவர்கள் மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றது யார். முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது யார்?. எதிர்காலத்தில் நான் இவற்றை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைப்பேன். உண்மையான கொலையாளிகள் யார் என்பது கூறுவேன்.

அநீதிகள் காரணமாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் போன்றவர்கள் உருவாகின்றனர். போரில் ஆயிரணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் தான் என கூறி இன்னும் பல விடயங்களை உரக்கக்கூறி குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

குறித்த நபர் விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Scotland, United Kingdom

15 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025