ஆயுதங்களை நேசித்த புலிகளும் அவற்றைப் பறிக்க முனைந்த இந்தியாவும்
1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற முதலாவது ஆயுத ஒப்படைப்பின் போது, விடுதலைப் புலிகள் தம்மிடம் இருந்த சுமார்800 ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள்.
அதேவேளை புலிகள் தம்வசம் வைத்திருக்கும் ஏனய ஆயுதங்களையும் மறுநாள் ஒப்படைத்துவிட வேண்டும் என்று இந்தியப்படைத் தளபதி புலிகளுக்கு அறிவித்திருந்தார்.
புலிகளின் இரண்டாம் கட்ட ஆயுத ஒப்படைப்பு தொடர்பாக, புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், இந்தியப்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்திருந்த புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மேஜர். ஜெனரல் ஹரிகிரத் சிங், பிரிகேடியர் பெர்ணான்டஸ் போன்றவர்களுடன் மற்றொரு இந்தியப்படை உயர் அதிகாரியும் கலந்துகொண்டார்.
இந்திய அதிகாரியின் எச்சரிக்கை:
சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் மிகவும் காரசாரமாக இருந்தது.
“புலிகள் தம்மிடம் மிகுதியாக உள்ள ஆயுதங்களை நாளை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில், இந்தியப்படைகள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பலவந்தமாகப் பறிக்கவேண்டி இருக்கும்|| என்று இந்திய அமைதி காக்கும் படையின் தளபதி ஹரிகிறத் சிங் புலிகளின் தலைவரிடம் உறுதியாகத் தெரிவித்தார்.
இதற்கான உத்தரவு புதுடில்லியில் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், புலிகளிடம் இருந்து ஆயுதங்களை உடனடியாக களையவேண்டும் என்ற நெருக்குதல்கள் தமது மேலிடத்தில் இருந்து தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் படைகள் சிறிலங்காப் படைகளுடன் இணைந்து இந்த ஆயுதக் களைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவர் தமது திட்டத்தை புலிகளின் தலைவரிடம் தெரிவித்தார்.
புலிகளை நீராயுதபாணிகளாக்கி செயலிழக்க வைத்துவிட்டு, பின்னர் களத்தில் இருந்து புலிகளை முற்றாகவே அகற்றிவிடும் இந்தியாவின் கபட திட்டத்தை, புலிகளின் தலைவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.
தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த மற்றய தமிழ் அமைப்புக்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வந்து, அவர்களுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கி இருந்ததையும் பிரபாகரன் அறிந்திருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற அமைப்புக்களை தமிழீழத்தில் பலப்படுத்தவேண்டுமானால், புலிகள் பலவீனப்படுத்தப்படவேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்தையும் அவர் நன்றாகவே புரிந்துவைத்திருந்தார்.
எனவே, காரணத்தை காரணத்தினாலேயே உடைக்கவேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காரியங்களை முன்னெடுக்க அவர் எண்ணியிருந்தார்.
எதிரிக்கு, அவனது பாணியிலேயே பதில் கொடுக்கவேண்டும் என்று தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார்.
தம்மிடம் உள்ள மற்றொரு தொகுதி ஆயுதங்களையும் ஒப்படைக்கச் சம்மதிப்பதாக இந்தியப்படை அதிகாரிகளிடம் கூறி, அவர்களை அனுப்பிவைத்தார்.
தலைவர் கூட்டிய நள்ளிரவுக் கூட்டம்:
அன்றய தினம் மாலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் போராளிகளுடனாக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தளபதிகள், பொறுப்பாளர்கள் உட்பட நூற்றிற்கும் அதிகமான போராளிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள், நள்ளிரவு வரை அந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், அங்கு வந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இருந்த ஆயுதங்கள், புலிகளின் அரசியல் பிரிவினரால் சேகரிக்கப்பட்டன.
புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபன் மற்றும் அவரது உதவியாளர் நவீனன் போன்றவர்கள் இந்த ஆயுத சேகரிப்பை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இதேவேளை, புலிகளின் காரியாலயத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று கண்களில் எண்ணை விடுக்கொண்டு சிலர் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்திய மற்றும் சிறிலங்காப் படைகளுக்கு தகவல் வழங்குபவர்களும், சில ஊடகவியலாளர்களும், இந்தச் சம்பவத்தை அருகில் உள்ள கட்டிடங்களில் தங்கியிருந்து அவதாணித்துக்கொண்டிருந்தார்கள்.
கைத்துப்பாக்கிகள், AK47, T56 ரக துப்பாக்கிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசியல் பிரிவு பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பதையும் அவர்கள் அவதானித்தார்கள்.
மறுநாள் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த 2வது ஆயுத ஒப்படைப்பின்போது ஒப்படைக்கப்படுவதற்காக இந்த ஆயுதங்கள் அவர்களது அரசியல் பிரிவினரால் சேகரிக்கப்படுவதாக, இந்த நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் நம்பினார்கள்.
தமது நம்பிக்கையை அப்படியே தமது மேலதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் அறிவிக்கவும் செய்தார்கள்.
இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு:
ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, புலிகளின் இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு இடம்பெற்றது, இம்முறை ஆயுத ஒப்படைப்பு யாழ் கோட்டையினுள் நடைபெற்றது.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில், இராணுவத்தின் வடபிராந்திய நடவடிக்கைத் தளபதி கேணல் விஜய விமலரெட்ன கலந்துகொண்டார்.
விடுதலைப் புலிகள் சார்பில் இம்முறை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகி கலந்துகொள்ளவில்லை.
பதிலாக, புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தளபதி குமரப்பா, மற்றும் புலிகளின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த நாராயன், ராஜு, ராஜா போன்றோர் கலந்து கொண்டார்கள்.
இதுவரை புலிகளின் அரசியல் பிரிவினரால் கையாளப்பட்டு வந்த புலிகளின் ஆயுத ஒப்படைப்பு விடயம், புலிகளின் இராணுவப் பிரிவினரின் கைகளுக்கு மாறிவிட்டிருந்ததை, புலிகளின் இந்த இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு நிகழ்வு வெளிப்படுத்தியது.
ஆயுதங்களில் உயிரை வைத்திருந்த போராளிகள்:
இது இவ்வாறு இருக்க, ஆயுத ஒப்படைப்பு தொடர்பான விடுதலைப் புலி உறுப்பினர்களின் மனவோட்டம் மிகவும் மறுபட்டதாகவே இருந்தது.
எந்தவொரு விடுதலைப் புலியும் இந்த ஆயுத ஒப்படைப்பை வரவேற்கவில்லை. மாறாக ஆயத ஒப்படைப்பிற்கு தமது எதிர்ப்புக்களையே வெளிப்படுத்தி வந்தார்கள்.
புலிகள், ஆயுதங்களை தமது உயிரினும் மேலாக மதித்தார்கள். நேசித்தார்கள். சண்டைகளின் போது, எதிரியிடம் இருந்து ஒரு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக பல உறுப்பினர்களை இழக்கும் அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முன்னுரிமை வழங்கி வந்தார்கள்.
புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், ஒரு போராளி, ஸ்ரீலங்கா படை வீரனைச் சுட்டுக்கொல்வது பெரிய விடயம் அல்லளூ அவ்வாறு கொல்லப்பட்ட படையினனின் ஆயுதத்தை கவர்ந்து சென்று தனது பொறுப்பாளரிடம் காண்பிப்பதுதான் பாராட்டுக்குரிய ஒரு விடயமாக இருந்தது.
அக்காலத்தில் சிறிலங்காப் படையினருடனான சண்டைகளின் போது, புலிகள் தாம் சுட்டுத் தீர்த்த ரவைகளின் வெற்றுக் கூடுகளைக்கூடச் சேகரித்து செல்வது வழக்கம்.
அந்த வெற்று ரவைகளில் வெடிமருந்து நிறப்பி மீண்டும் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்துவந்தார்கள்.
அக்காலத்தில் துரோகிகளுக்கும் சமுக விரோதிகளுக்கும் தண்டனை வழங்க போராளிகளை அனுப்பும்போது, எம்டி (empty) கொண்டு வா..|| என்று கூறித்தான் பொறுப்பாளர்கள் அனுப்புவார்கள்.
குறிப்பிட்ட நபரைச் சுட்டு தண்டணை வழங்கிவிட்டு, வெற்றுத் தோட்டாவை எடுத்துக்கொண்டு திரும்பவேண்டும் என்பதே அப்போதைய நடைமுறையாக இருந்தது.
அந்த அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள், அப்படி புலிகள் மதித்த, நேசித்த தமது ஆயுதங்களை ஒப்படைப்பதென்பது, அதுவும் தமது ஜென்ம விரோதியிடமே ஒப்படைப்பதென்பது, புலி உறுப்பினர்களால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவே இருந்தது.
தமிழீழத்தை உயிரிலும் மேலாக நேசித்த புலிகள்
அக்காலத்தில் புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டு, 85 அல்லது 86ம் ஆண்டளவில் தெரிவித்ததாகக் கூறப்பட்ட ஒரு வசனம், தமிழ் மக்களிடையே பிரபல்யம் அடைந்திருந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அப்பொழுது இந்தியாவில் தங்கியிருந்து விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.
அப்பொழுது இந்தியாவின் டில்லி, பெங்களுர், திம்பு என்று அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. த.வி.கூ. உட்பட பல அமைப்புக்களும் அந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டன.
பிரபாகரன் அவர்களும் அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார், இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு பற்றி அக்கூட்டங்களில் ஆராயப்பட்டன.
அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்த கிட்டு, “தமிழீழத்தை கைவிட்டு ‘தம்பி| வந்தாலும் வெடிதான்|| என்று கூறிய வார்த்தைகள் அக்காலத்தில் போராளிகளிடையேயும், தமிழ் மக்களிடையேயும் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தன.
கிட்டுவின் இந்த வார்த்தைகள், தலைமை மீதுள்ள தமது அவநம்பிக்கையை வெளிக்காண்பிப்பதாக அமையவில்லைளூ தமிழீழத்தின் மீது அவர் கொண்டிருந்த உறுதியை வெளிக்காண்பிப்பதாக அமைந்திருந்தன.
கூட்டனி மற்றும் ஏனய அமைப்புக்களின் தலைவர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விடுவார்களோ என்று மக்கள் மத்தியில் எழும்பியிருந்த சந்தேகத்தை அடிப்படையாக வைத்து, தமிழீழம் பற்றிய புலிகளின் உறுதியை வெளிப்படுத்தவே கிட்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.
புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பது தமிழீழத்தை கைவிடுவதற்கு சமம் என்பதால், ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் புலி உறுப்பினர்கள் எதிர்மாறான போக்கையே கொண்டிருந்தார்கள்.
ஆயுத ஒப்படைப்பை எதிர்த்து சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஷசயனைட்| உட்கொண்டதாகவும் அப்பொழுது செய்திகள் வெளிவந்திருந்தன.
ஆயுதங்களை ஒப்படைத்து சரனாகதி அடைவதைவிட, போரிட்டு வீரச்சாவடைவது மேல் என்றே பெரும்பாண்மையான போராளிகள் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள்.
அதனை தமது தலைவரிடமும் எடுத்துரைத்தார்கள். ஆனால், எதிர்காலத்தை கச்சிதமாகக் கணக்கிடக்கூடிய ஒருவர் என்று அவரது எதிரிகளால் கூட மெச்சப்படுகின்ற புலிகளின் தலைவர் பிரபாகரனின் உள் மனதில் பல தீர்மானங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தன.
தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கும், தமிழீழத்தின் எதிர்காலத்திற்கும் எதிராக மாபெரும் சக்திகள் திரண்டிருக்கும் போது, புத்திசாதுர்யமாக, நிதானமாகத்தான் அவற்றை எதிர்கொள்ளவேண்டும் என்று புலிகளின் தலைவர் நினைத்தார். திட்டமிட்டார்.
ஆகஸ்ட் 6ம் திகதி நள்ளிரவு யாழ்பாணத்தில் புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட்டிய கூட்டத்தில், புலிகளின் எதிர்கால நகர்வுகள் பற்றிய தனது திட்டத்தை போராளிகளுக்கு விளக்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட புலி உறுப்பினர்களின் முகங்கள் பிரகாசித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |