பிரபாகரனின் குடும்பம் உயிருடன் இருப்பது நூற்றுக்கு ஐநூறு வீதம் உண்மை - புலம்பெயர் முக்கியஸ்தர் தகவல்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பம் உயிருடன் இருப்பது நூறுக்கு ஐநூறு வீதம் உண்மை என பிரான்ஸ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, தலைவர் பிரபாகரன் தொடர்பில் பழ நெடுமாறன் ஐயா பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிட்ட அத்தனை அறிக்கைகளும் உண்மை.
தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி அவருடைய மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பது உண்மை நூற்றுக்கு ஐநூறு வீதம் உண்மை.
இதை விரும்பாதவர்கள் யாரென்று சுருக்கமாக சொல்லிவிட்டு செல்கின்றேன்.
ஆரம்பத்தில் இவர்கள் உயிருடன் இருப்பதாக எனக்கும் பலருக்கும் சொன்னவர்கள் தான் இப்போது அவர்களின் இருப்பை விரும்பவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
சொத்துக்களை சூறையாடி இருக்கலாம். இயக்கத்தை பற்றி இழிவாக கதைத்திருக்கலாம் இதனால் அவர்கள் இவ்வாறு கூறலாம்.
நெடுமாறன் ஐயா ஒரு முதிர்ந்த அரசியல்வாதி அவர் அவ்வளவு சீக்கிரம் ஒரு விடயம் பற்றி வாய் திறக்கமாட்டார்”என கூறியுள்ளார்.
தலைவர் பிரபாகரன் தொடர்பில் ச.வி கிருபாகரன் கூறியவற்றை காண்பதற்கு கீழே உள்ள காணொளியை பார்வையிடுங்கள்
