தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சியம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!!
பிரித்தானியாவின் 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்துள்ளமை குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பிரித்தானியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் குறித்த தடையை நீடிப்பது தொடர்பில் பிரித்தானியா அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதுடன், தடையை நீக்க கோரி வழக்கு தொடர்ந்த தமக்கும் அது குறித்து அறிவிப்புக்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் புலம்பெயர் தமிழர் ஒருவர் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.