சுனாமி பேரழிவின் போது புலிகளின் சர்வதேச உதவிகளை தடுத்த சிறிலங்கா அரசு
சுனாமி பேரிடரின் போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தால் பெறப்பட்ட சர்வதேச உதவிகளை தமிழர் தாயகங்களுக்கு செல்ல விடாமல் அன்றைய அரசாங்கம் தடுத்ததாக அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுனாமி பேரனர்த்த காலப்பகுதியில் தமிழர் தாயக பகுதிகள் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தன.
இந்த காலப்பகுதியானது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமும் மற்றும் சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேசத்திடம் பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்த காலப்பகுதி.
குறித்த காலப்பகுதியில் யுத்தத்தில் தமிழர் தாயகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுனாமி அனர்த்தம் மேலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், உதவி வழங்கும் நாடுகள் கூட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெற்ற போதும் அவை தமிழர் தாயக பகுதிகளுக்கு சென்றடையாமல் கடந்த ஆட்சியாளர்களினால் தடுக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அனர்த்த நிலைமை, மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல், நடப்பு அரசியல் மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |