ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்
By Independent Writer
தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்த தினத்தில் மதுபானங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், களங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது.
