கூட்டமைப்பின் வெட்கம் கெட்ட செயல் - பகிரங்கத்திற்கு வந்த விடயம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கம் கெட்ட செயலை செய்துள்ளனர் எனவும் தமிழர்களின் பாரம்பரிய பூமி கிழக்கில் உள்ள பிற்போக்கு அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் ஈரோஸ் கட்சியினுடைய செயலாளர் ராஜ்நாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கில் பிள்ளையான் என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு அங்குள்ள அக்காணிகளை அபகரிப்பதே வேலை.
வாகரை, மாங்கேணி போன்ற பிரதேசங்கள் முழுவதும் பல்வேறான காணிகளை அபகரித்துள்ளார். இதனை தட்டி கேட்க்கும் நபர்களை உடனடியாக அரசியல் தலையீட்டில் இடமாற்றம் செய்கிறார்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கம் கெட்ட செயலை செய்துள்ளனர். அவர்களின் மக்கள் பிரதிநிதிதுவம் பிழையானது.
ஒழுங்கற்ற பிரதிநிதித்துவதால் மக்களின் உரிமைகள் நேரடியாகவே மீறப்படுகிறது.'' என தெரிவித்துள்ளார்.
