8 நாடுகளின் நேரத்தை காட்டும் கடிகாரம் : லக்னோ வியாபாரியின் அசத்தல் கண்டுப்பிடிப்பு (காணொளி)
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ஹானிமன் கிராசிங் பகுதியில் உள்ள சந்தையில் மரக்கறி விற்பனை செய்து வரும், அணில் குமார் சாகு என்பவர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலின் அறக்கட்டளையான ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ராவுக்கு எட்டு நாடுகளில் நேரத்தை காட்டும் கடிகாரத்தை வழங்கியுள்ளார்.
இதற்கான பணியை கடந்த ஒக்டோபர் மாதம் நவராத்திரியின் போது ஆரம்பித்ததாகவும் நீண்ட முயற்சிக்கு பின்னர் 75 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட கடிதத்தை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிகாரத்தில் இந்தியா, துபாய் , சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் ஜப்பானின் டோக்கியோ நகரம் ரஷ்யாவின் மார்க்கோ, சீனாவின் பீஜிங் நகரம், அமெரிக்காவில் வாஷிங்டன் நியூயார்க் நகரிஷன் நேரத்தை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிகாரத்தை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராயிடம் அனில் குமார் சாகு வழங்கியுள்ளார்.
25 நாடுகளின் நேரத்தை காட்டும் கடிகாரம்
இது பற்றி அனில் குமார் சாகு தெரிவிக்கையில்,
“ லக்னவில் உள்ள காது ஷியாம் கோவில் உட்பட சில இடங்களுக்கு இதுபோன்ற கடிகாரங்களை பரிசாக வழங்கியுள்ளேன். எதிர்காலத்தில் 25 நாடுகளின் நேரத்தை காட்டும் கடிகாரத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளேன்.
இது போன்ற ஒரு கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேசம் முதல்முதல் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு பரிசாக வழங்க உள்ளேன்.
75 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட கடிகாரத்தை தயாரிக்க 3 ஆயிரம் செலவாகிறது. அதை செய்வதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இது போன்ற கடிகாரங்களை வணிகரீதியாக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
ஆனால் போதிய பண வசதி இல்லாததால் இதை செய்ய முடியவில்லை. தனது வீட்டு உரிமையாளருடன் நேர பயன்படுதி குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது இந்த கடிகார தயாரிப்பு எண்ணம் தோன்றியது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |