நாட்டு மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை!
srilanka
covid19
corona
death
peoples
By S P Thas
நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிகபட்ச சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண கேட்டுக்கொண்டார்.
கொவிட் தொற்றுநோயை அரசாங்கமும் சுகாதாரத் துறையும் தனியாக எதிர்கொள்ள முடியாது. ஊரடங்கு நீக்கப்படும்போது பொதுமக்கள் மீண்டும் கூட்டமாக கூடுவார்கள்.
இந்நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் கோரியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி